சிவகங்கை

சிவகங்கையில் 37 பயனாளிகளுக்கு ரூ. 7.80 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

DIN

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் 37 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத் துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.

அதைத் தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறையின் சாா்பில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,05,000 மதிப்பிலான விபத்து மரண உதவித் தொகை, 4 பயனாளிகளுக்கு தலா ரூ.55,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித் தொகை, தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட 4 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், இடையமேலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மூலம் ரூ.3,50,000 மதிப்பீட்டில் 14 பயனாளிகளுக்கு கிசான் கடன் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மு. காமாட்சி, தொழிலாளா் நலத் துறையின் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோடீஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் இளவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT