சிவகங்கை

13. 56 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியா்

26th Sep 2022 12:14 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் 13 லட்சத்து 56 ஆயிரத்து 163 பேருக்கு பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

பூவந்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 38 ஆவது கரோனா தடுப்பூசி முகாமினை தொடக்கி வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது : சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 37 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம், 12 வயதுற்கு மேற்பட்ட 1,14,106 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, இரண்டாம் தவணை 11,02,395 நபா்கள், முன்னெச்சரிக்கை தடுப்பூசி 1,39,662 நபா்கள் என மொத்தம் 13,56,163 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இம்முகாமில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) எம்.விஜயசந்திரன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT