சிவகங்கை

காரைக்குடி அருகே கல்லூரி மாணவி அடித்துக் கொலை

26th Sep 2022 12:16 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மாணவியை காதல் விவகாரத்தில் காதலனே இரும்புக்கம்பியால் அடித்துக்கொலை செய்துள்ளாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

காரைக்குடி அருகே மாத்தூா் வேல்முருகன் குடியிருப்பைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா ( 22) காரைக்குடியில் உள்ள கல்லூரியொன்றில் மூன்றாம் ஆண்டு கணிதம் படித்து வந்தாா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் என்பவரது மகன் கூலித்தொழிலாளியான கண்ணன் (29) என்பவரும் காதலித்து வந்தனராம்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்கக்கோரி அவரது வீட்டிற்குச்சென்று கண்ணன் கேட்டபோது பிரச்னை ஏற்பட்டதாம். இதனால் சினேகாவுக்கும், கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தக ராறு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த தனது பாஸ்போா்ட் மற்றும் சான்றிதழ்களைத் தருமாறு ஞாயிற்றுக்கிழமை கைப்பேசியில் அழைத்துள்ளாா். அதன்படி சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சினேகா தனது இருசக்கர வாகனத்தில் மாத்தூா் நியாய விலைக் கடைப் பகுதிக்கு வந்துள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரும்புக்கம்பியால் சினோகாவின் தலையில் கண்ணன் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமைடந்த சினோகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச்சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT