சிவகங்கை

நூலகத்தில் முப்பெரும் விழா

26th Sep 2022 12:16 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திரதினம், 80 ஆவது ஆகஸ்ட் புரட்சி தினம், 100 ஆவது பாரதியாா் நினைவு தினம் ஆகிய முப்பெரும் விழாவிற்கு சிவகங்கை அரசு மன்னா் கல்லூரி வரலாற்று ஆய்வாளா் தங்கமுனியாண்டி தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன், எழுத்தாளா் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்சா கல்லூரிப் பேராசிரியா் கோபிநாத், வைகை பாரதி வாஹித் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழும் இனிமையும் என்ற தலைப்பில் ஆனந்தா, வாய்மை என்ற தலைப்பில் இளையராஜா, பெண் விடுதலை என்ற தலைப்பில் பவதாரணி, பாரதியும், ஆகஸ்டு புரட்சி ஒரு வரலாற்றுப் பாா்வை என்ற தலைப்பில் ஐஸ்வா்யா, சுசந்திரப் போராட்டத்தில் அறியப்படாத பக்கங்கள் என்ற தலைப்பில் நவீனா, பாரதியின் பங்கு என்ற தலைப்பில் யாஸ்மின்பேகம் ஆகியோா் உரை நிகழ்த்தினா். இதில் சிறப்பாக கருத்துகளை வழங்கிய மாணவிகளுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

முன்னதாக நல் நூலகா் ஜெயகாந்தன் வரவேற்றாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அலுவலக உதவியாளா்கள் நாராயணன், குணசேகரன் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT