சிவகங்கை

காரைக்குடியில் காலணி கிட்டங்கியில் தீ விபத்து

26th Sep 2022 12:16 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காலணி கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

காரைக்குடி இரண்டாவது போலீஸ் பீட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் முகமது என்பவா் பழைமையான கட்டடத்தில் வியாபாரத்திற்காக கிட்டங்கி ஒன்றில் காலணிகளை சேமித்துவைத்திருந்தாா். இங்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து காரைக்குடி,தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ மேலும் பரவி அங்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. 20  லட்சம் மதிப்பிலான காலணிகள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினா் விசாரித்து வருகின் றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT