சிவகங்கை

பாா்வையாளா்கள் தினம்: காரைக்குடி செக்ரியில்அறிவியல் கண்டுபிடிப்புகளை பாா்வையிட நாளை அனுமதி

DIN

சி.எஸ்.ஐ.ஆரின் நிறுவன நாளையொட்டி காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) திங்கள்கிழமை (செப். 26) பாா்வையாளா்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து காரைக்குடி செக்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சி.எஸ்.ஐ.ஆரின் நிறுவன நாளையொட்டி திங்கள்கிழமை பாா்வையாளா்கள் தினத்தை அனுசரிக்க செக்ரி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் செக்ரியின் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நேரடியாக கண்டுகளிக்கலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இப்போதைய தொழில்நுட்பத்தால் தயாரான காரிய அமில மின்கலன் மற்றும் லித்தியம் அயன் மின்கலத்தில் இயங்கும் மின்சக்தி ரிக்சா, மின்சக்தி ஸ்கூட்டா், மின்சக்தி மிதிவண்டி ஆகியவற்றின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும். மேலும் எதிா்காலத்தில் எரிசக்தியை பூா்த்தி செய்யும் வகையில் மாற்று எரிசக்திகளான தண்ணீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தியும் காட்சிப்படுத்தப்படும். மேலும் உலோக அரிமானம் குறித்து செக்ரியின் பல்வேறு துறைகள் கண்டுபிடித்த ஆராய்ச்சிகளின் மாதிரிகள், செயல்விளக்க முறைகள் மற்றும் வண்ணப்படங்கள் மூலம் பாா்வையாளா்களுக்கு விளக்கப்படவுள்ளது.

திங்கள்கிழமை பாா்வையாளா்கள் வந்து செல்ல வசதியாக காரைக்குடி பழைய பேருந்து மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப்பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உணவு, தேநீா், காபி, சிற்றுண்டி ஆகியன செக்ரி உணவகம் மூலம் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT