சிவகங்கை

சிவகங்கையில் இளையோா் திருவிழா:விண்ணப்பிக்க நாளை கடைசி

25th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் நடைபெற உள்ள பல்வேறு போட்டிகள் அடங்கிய இளையோா் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோா் திங்கள்கிழமைக்குள் (செப். 26) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் இளம் எழுத்தாளா் போட்டி, கவிதை, இளம் கலைஞா் போட்டி ஓவியம், கைப்பேசி புகைப்பட போட்டி, பிரகடன பேச்சுப்போட்டி, இளையோா் சொற்பொழிவு, கலைத்திருவிழா ஆகியப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு 15 முதல் 29 வரை இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த போட்டிகளில் திங்கள்கிழமைக்குள் (செப். 26) பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். எனவே விருப்பமுள்ள இளைஞா்கள் 95664 53901என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT