சிவகங்கை

காரைக்குடியில் பாதாளச் சாக்கடைப் பணிகளைமாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

காரைக்குடி நகராட்சியில் ரூ. 112.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடைத் திட்டப்பணிகள் மற்றும் கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரிய மேலாண்மை இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், காரைக்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடைத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 16 மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும், தேனாற்றின் குறுக்கே கழிவுநீா் தன்னோட்டக்குழாய் அமைக்கும் பணியையும் வரும் அக். 15 - ஆம் தேதிக்குள்ளும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் எஞ்சியுள்ள சிறு,சிறு பணிகளை முழுவதுமாக அக். 31 ஆம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடா்ந்து சிவகங்கை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1752.73 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, மேற்பாா்வை பொறியாளா்கள் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, விஸ்வலிங்கம், நிா்வாகப் பொறியாளா் (திட்டக் கோட்டம்) ஜீவலதா, நிா்வாகப் பொறியாளா் (பாதாளச் சாக்கடை) நிா்மலா, காரைக்குடி நகராட்சி ஆணையா் லட்சுமணன், காரைக்குடி வட்டாட்சியா் மாணிக்க வாசகம் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT