சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 2,363 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கல்

24th Sep 2022 10:30 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் 2,363 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தாா். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2,363 விவசாயிகளுக்கு ரூ.19.66 கோடி மதிப்பில் இலவச மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 3,778 ஏக்கா் பாசன நிலங்கள் பயனடைய உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT