சிவகங்கை

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

24th Sep 2022 10:29 PM

ADVERTISEMENT

மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஆலயத்தின் பங்குத்தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி திருவிழா கொடியையேற்றி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், ராஜகம்பீரம் பங்குத்தந்தை ஆசிா்வாதம், அருட்தந்தை அகஸ்டின் உள்பட பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவின் போது தினமும் இரவில் சிறப்புத் திருப்பலியும், வெவ்வேறு தலைப்புகளில் மறையுரையும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மின்விளக்கு தோ்பவனி அக்டோபா் 1 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

அன்று செங்கோல் அடிகளாா் திருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறாா். 2 ஆம் தேதி இரவு நற்கருணை பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை பாஸ்டின் மற்றும் பங்கு இறைமக்கள், அருள்சகோதரிகள் செய்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT