சிவகங்கை

ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில்பட்டமளிப்பு விழா: மத்திய இணையமைச்சா் பங்கேற்பு

24th Sep 2022 10:32 PM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் 7-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இணை அமைச்சா் பானுபிரதாப்சிங் வா்மா சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு 2021-22 ஆம் கல்வியாண்டில் பி.இ., முடித்த 275 மாணவ, மாணவிகளுக்கும், எம்.இ., முடித்த 22 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கிப்பேசியது: தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாது. தனித்திறன்களை வளா்த்துக் கொள்ளவேண்டும். இந்தியா்கள் பல நாடுகளில் புகழ்வாய்ந்த பதவிகளில் உள்ளனா். இக்கல்லூரியிலும் திறன்மிக்க பொறியாளா்களை உருவாக்கியிருப்பதும், மாணவா்கள் ரோபடிக், மின்சார வாகனம், சூரிய ஆற்றல் வாகனம் போன்றவற்றை உருவாக்கியுள்ளதும் பாராட்டுக்குரியது என்றாா்.

விழாவில் ஸ்ரீராஜராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரு மான சொ.சுப்பையா தலைமைவகித்துப்பேசினாா். மத்திய அரசின் கதா்வாரியத்தலைவா் குப்புராமு வாழ்த்திப்பேசினாா்.

விழாவில் காரைக்குடி முன்னாள் சட்டபேரவை உறுப்பினா் ஹெச். ராஜா, முரளி, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் குணசேகரன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கல்லூரியின் முதல்வா் அழ. மயில்வாகனன், துணை முதல்வா் மகாலிங்க சுரேஷ், ஒருங்கிணைப்பாளா் வடிவாம்பாள் மற்றும் பேராசிரியா்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT