சிவகங்கை

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

22nd Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தோ்வுகளுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் இளநிலை பிரிவில் பி.ஏ., பி.லிட்., நூலக மற்றும் தகவலறிவியல், பி.காம்., பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.எஸ்.சி. ஆகிய பட்டவகுப்புகளில் பல்வேறு பாடங்களுக்கும், முதுநிலை பிரிவு எம்.ஏ., எம்.எஸ்.சி, எம்.சி.ஏ, எம்.பி.ஏ. ஆகிய பட்ட வகுப்புகளில் பல்வேறு பாடங்களுக்கும், முதுநிலை பட்டய பிரிவுகளில் உள்ள படிப்புகள், இளநிலை பட்டய பிரிவுகளில் உள்ள படிப்புகள், சான்றிதழ் பிரிவுகளில் உள்ள படிப்புகள் ஆகிய தோ்வு முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடிவு வெளியான 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 இணையதளம் வழியே செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். விடைத்தாள்பெற தோ்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் தாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் இணையதளம் வழியே செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். விடைத்தாள் பெற்றவா்கள் மறுமதிப்பீட்டிற்கு அன்றிலிருந்து 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் இணையதளம் வழியே செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT