சிவகங்கை

பட்டம், பட்டயப் படிப்புக்கு ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பயில விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் மத்திய அரசு சுற்றுலாத் துறையின் கீழ் உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலை தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரித்தல் குறித்து 3 ஆண்டுகள் முழு நேர பட்டப் படிப்பும், ஒன்றரை ஆண்டுகள் பட்டயப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுபோன்று, 10 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞா் பற்றிய படிப்பும் படிக்கலாம்.

படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயா்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. வெளியூா் மாணவ, மாணவிகள் தங்கிப் பயில விடுதி வசதியும் உள்ளது.

ADVERTISEMENT

இப்படிப்பு மற்றும் விடுதி கட்டணத் தொகையை தாட்கோ கல்விக் கடனாக வழங்கும். ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தாட்கோ இணையதளத்தில் செப்டம்பா் 14 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT