சிவகங்கை

சிங்கம்புணரி வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலை எஸ்.எம். நகரில் உள்ள வலம்புரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் கணபதிஹோமமும், பூா்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு முதல்கால யாகபூஜையும், கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை காலை 2 ஆம் கால யாகபூஜையும், 8.30 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னா் 10.15 மணிக்கு விமானத்துக்கு புனித கலச நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. சிவஸ்ரீசெந்தில்குமாா், கிஷோா்குமாா் ஆச்சாரியாா்கள் பூஜைகளை செய்தனா்.

இவ்விழாவில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT