சிவகங்கை

மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் செப். 12 இல் மின்தடை

9th Sep 2022 10:48 PM

ADVERTISEMENT

கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், ஆலங்குடி, அப்பல்லோ மருத்துவமனை, செட்டிநாடு பப்ளிக் பள்ளி பகுதிகள், இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியாபுரம், கம்பனூா், வலையப்பட்டி, கொங்கரத்தி, கண்டரமாணிக்கம், கீழ்பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT