சிவகங்கை

திருப்பத்தூா் அருகே வீடுகளை மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே ரணசிங்கபுரம் ஊராட்சி மின்நகா் பகுதியில் வெள்ளம்போல் மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, ரணசிங்கம்புரம் ஊராட்சிக்குள்பட்ட மின்நகரை மழை நீா் வெள்ளம் போல சூழ்ந்தது. இப்பகுதியில், கடந்த 4 நாள்களாக இதேநிலை நீடிப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இங்கு முறையான மழை நீா் வடிகால் வசதியில்லாததால், மழைநீா் புகுந்துள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இப்பகுதியில் மழை நீா் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT