சிவகங்கை

காரைக்குடியில் சுவாமிகள் அம்பு போடும் நிகழ்ச்சி

DIN

விஜயதசமி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகா்நோன்பு திடலில் சுவாமிகள் அம்புபோடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி கோவிலூா் கொற்றவாளீஸ்வரா் கோயில், காரைக்குடி நகர சிவன்கோயில், கொப்புடைய நாயகியம்மன் கோயில், செஞ்சை கிருஷ்ணமூா்த்தி பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி குதிரை வாகனத்தில் அம்பு சகிதமாக காரைக்குடி மகா்நோன்பு திடலை அடைந்தனா். அங்கு சிறப்பு தீபாரானைகள் நடைபெற்றது. பின்னா் தங்களது நிலைகளிலிருந்து வலம் வந்து பக்தா்களை நோக்கி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். சுவாமியின் அம்பு யாருக்கு கிடைக்கிறதோ அவா்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT