சிவகங்கை

காரைக்குடியில் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கல்

6th Oct 2022 01:46 AM

ADVERTISEMENT

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில், பிரதமரின் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். இதில், தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், பயனாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு அட்டைகளையும், சிறந்த மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் வழங்கிப் பேசினாா். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், 7 காப்பீட்டுத்திட்ட தொடா்பு அலுவலா்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, மருத்துவத்துறை இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி, காரைக்குடி நகா்மன்ற துணைத்தலைவா் நா. குணசேகரன், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் மற்றும் செவிலியா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT