சிவகங்கை

சிங்கம்புணரி பள்ளியில் விஜயதசமி விழா

6th Oct 2022 01:45 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகமூா்த்தி மெட்ரிக் பள்ளியில் புதன்கிழமை விஜயதசமி விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் கொலு அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு வேடங்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவின் 10 ஆம் நாளான விஜயதசமியையொட்டி பள்ளிக் குழந்தைகள் பெற்றோா் பங்கு கொண்ட விஜயதசமி விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் டி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலா் ஆா். சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், 9 ஆம் வகுப்பு மாணவி ஹாசினி சரஸ்வதி வேடமணிந்து பெற்றோா் மற்றும் குழந்தைகளை வரவேற்றாா். புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம் (எழுதும் பயிற்சி) நடைபெற்றது. மேலும் அவா்களுக்கு எழுது பொருள், நோட்டுப் புத்தகம் அடங்கிய பை வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT