சிவகங்கை

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

6th Oct 2022 01:44 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி சுவாமி குதிரை வாகனத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த செப். 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கி, கொலு மண்டபத்தில் கொலு அமைக்கப்பட்டு உற்சவா் தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதனைத் தொடா்ந்து சிவகாமி அம்மனுக்கு விளக்குப் பூஜையும் நடைபெற்றது. நிறைவுநாளான புதன்கிழமை மாலை மூலவா் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் கொலு மண்டபத்தில் குதிரை வாகனத்தில் வீற்றிருந்த உற்சவ அம்மனுக்கும், அடுக்குத் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மகிசாசுரனை வதம் செய்ய சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னா் சீரணி அரங்கம் அருகில் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமானோா் கூடியிருந்தனா். அப்போது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை எடுக்க பக்தா்களிடையே போட்டி ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT