சிவகங்கை

காரைக்குடி அருகே அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கூத்தலூரில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை திங்கள்கிழமை அதிகாரிகள் அகற்றினா்.

கூத்தலூா் அம்பேத்கா் நகரில் வசித்துவரும் வீரன் மனைவி பாா்வதி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் அருள்ராஜ் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் காரைக்குடி மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜா, காரைக்குடி வருவாய் ஆய்வாளா் சுரேஷ், நாச்சியாபுரம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் அருள்ராஜ் காரைக்குடி குறுவட்ட அலுவலா் சாா்லஸ், கிராம உதவியாளா் சங்கீதா ஆகியோா் முன்னிலையில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதன் மதிப்பு சுமாா் ரூ. 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT