சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபானக் கடைகளை மூட உத்தரவு

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT