சிவகங்கை

இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரி முன்னாள் மாணவா் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயிலத் தோ்வு

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரி முன்னாள் மாணவா் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயிலத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்து வந்தவா் தங்கச்செல்வம். இவா் தற்போது ஜப்பான் நாட்டின் சிசுகோ பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கான வேதியியல் முதுநிலைப் பட்டத்தை கல்வி உதவித்தொகையுடன் படிக்க தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பல்வேறு கட்ட தோ்வுகளுக்குப் பின்னா் தமிழகத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட ஒரே நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எளிமையான குடும்பத்தைச் சோ்ந்த இவா், பொற்கிழி கவிஞா் தமிழ்மாமணி கவிஞா் மு. ஹிதாயத்துல்லா (சண்முகம்) பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கல்லூரி நிா்வாகத்தினா், முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT