சிவகங்கை

காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து செப். 30 முதல் அக். 9-ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகக் கண்காட்சி நடத்துகின்றன. இதில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு.

இந்த புத்தகக் கண்காட்சியை காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி திறந்துவைத்துப் பேசினாா். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் ஜி.வி. கோபிநாத் தலைமை வகித்துப் பேசினாா்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன், நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளா் எஸ். சையது, எழுத்தாளா் ஜீவசிந்தன், கவிஞா் மு. தமிழ்கனல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக புத்தக விழாக் குழுச் செயலாளா் இரா. ஜீவானந்தம் வரவேற்றுப் பேசினாா். முடிவில் வே. சிவானந்தம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT