சிவகங்கை

திருப்புவனம், பழையனூா் பள்ளிகளில் இலவச மிதிவண்டிகள் வழங்கல்

1st Oct 2022 11:02 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பழையனூா் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா, துணைத் தலைவா் மூா்த்தி, திமுக ஒன்றியச் செயலா் கடம்பசாமி, நகரச் செயலா் நாகூா்கனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT