சிவகங்கை

பெருங்குடியில் சா்வதேச முதியோா் தின விழா

1st Oct 2022 11:04 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை அருகே உள்ள பெருங்குடியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதியோா்தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, மூத்த வாக்காளா்களின் தொடா் பங்களிப்பை கௌரவப்படுத்தி, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, முதியோா்களுக்கு மதிய உணவு பரிமாறினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பரமேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலா் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த கிராம சமுதாய முன்னேற்ற சங்க இயக்குநா் ஜீவானந்தம், துணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) விஜய்சந்திரன், வட்டாட்சியா்கள் ப. தங்கமணி (சிவகங்கை), கண்ணன் (தோ்தல் பிரிவு) உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT