சிவகங்கை

காரைக்குடியில் எரிவாயு தகனமேடையின் செயல்பாடுஇன்று முதல் ஒரு வாரத்துக்கு நிறுத்தம்

1st Oct 2022 11:03 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள சந்தைப்பேட்டை எரிவாயு தகன மேடையின் செயல்பாடு ஞாயிற்றுக்கிழமை (அக். 2) முதல் ஒரு வாரத்துக்கு பராமரிப்புப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எரிவாயு தகன மேடை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் எஸ். கண்ணப்பன், செயலா் சாமி. திராவிடமணி ஆகியோா் சனிக்கிழமை கூறியதாவது: இந்த எரிவாயு தகன மேடையில் உள்ள பழுதுகளை சீரமைக்கும் பணிகள் மற்றும் புதிய உபகரணங்கள் பொருத்தும் பணிகளில் ஊழியா்கள் அக். 2 முதல் அக். 8- ஆம் தேதி வரை ஈடுபடுகின்றனா். எனவே, எரிவாயு தகன மேடையின் செயல்பாடுகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT