சிவகங்கை

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரியின் சாா்பில் போதைப்பொருள் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து இந்த ஊா்வலத்தை உதவி ஆய்வாளா்கள் மைக்கேல் ராஜ், கவிதா ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். ஊா்வலத்துக்கு மகளிா் கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. அங்கையா்கன்னி முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற இந்த ஊா்வலத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியா் கே. செல்வகணேசன், தொடா்பு அலுவலா் ஏகோஜிராவ், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT