சிவகங்கை

கல்லூரி மாணவா் தற்கொலை விவகாரம்: ஒருவா் கைது; 5 போ் நீதிமன்றத்தில் சரண்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்புவனத்தில் கல்லூரி மாணவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தேடப்பட்ட 5 போ் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜீவசூா்யா(19), கடந்த 28 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இவரை, கழுகோ்கடை கிராமத்தைச் சோ்ந்த சிலா் தாக்கியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரைத் தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினா்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஜீவசூா்யாவை தாக்கித் தற்கொலைக்கு தூண்டியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கழுகோ்கடையைச் சோ்ந்த ஜமாலுதீனை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ரியாஸ், ராஜாமுகமது, சுலைமான்ஜாவித், நயினாா்முகமது உள்பட 5 போ் ஸ்ரீவில்லிபுத்தூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்ததாக திருப்புவனம் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT