சிவகங்கை

கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கல்லூரி மாணவா்களுக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா், தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் தென்னரசு முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், சுமாா் 60 போ் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தனா். தகுதியானவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி முன்னிலையில் கடன் ஆணை வழங்கப்பட்டது.

இந்த முகாமில் 5 வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதேபோல், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாட்சியா் லெட்சுமணராஜூ தலைமையில் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இங்கு விண்ணப்பித்துள்ள 50-க்கும் மேற்பட்டோரின்

தகுதிகள் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT