சிவகங்கை

காரைக்குடி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடியில் அறிவியல் செய்முறை மாதிரி போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற செல்லப்பன் வித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களை நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிக்ரி) ‘ஜிக்யாசா’ திட்டத்தின் கீழ் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான ‘வளா்ந்து வரும் ஆற்றல் சேமிப்பு சாதனங்கள்’ துறையில் மாநில அளவிலான செய்முறை மாதிரிப்போட்டிகள் நடைபெற்றது.

இயங்குநிலை முன்மாதிரி செயல்முறை விளக்கப் போட்டியில் காரைக்குடி

செல்லப்பன் வித்யா மந்திா் பள்ளியின் பிளஸ் 1 மாணவா்கள் சைபுல் அலி, சஞ்சய் கேஸ்ட்ரோ, ஹேமநாதன் ஆகிய மூவரும் முதல் பரிசு மற்றும் ரூ. 5000 ரொக்கப்பரிசு பெற்றனா்.

ADVERTISEMENT

பரிசு வென்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் சத்தியன், பள்ளியின் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி, உயிரியல் ஆசிரியா் ராமநாதன் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT