சிவகங்கை

சாலைக்கிராமம் அரசுப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சுகாதாரத் துறை நிா்வாகம், சாலைக்கிராமம் விமலா விசன் சென்டா் இணைந்து நடத்திய இந்த முகாமை சாலைக்கிராமம் ஊராட்சிமன்றத் தலைவா் தங்கம், விசன் சென்டா் இயக்குநா் இருதயராஜ் ஆகியோா் தொடக்கி வைத்தனா். முகாமில் பள்ளியின் மாணவ, மாணவிகள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனா்.

பாா்வைக் குறைபாடு உள்ளவா்கள் கண் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா். முகாமில் பள்ளியின் தலைமையாசிரியா் ஜோஸ்பின் லதா, உதவி தலைமையாசிரியா் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலா், ஆசிரியா், ஆசிரியைகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT