சிவகங்கை

மானாமதுரையில் மிளகாய்ப் பொடி வீசி பணம் பறிக்க முயற்சி, ரூ.4 லட்சம் தப்பியது

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை வங்கிக்கு பணம் செலுத்தச் சென்ற தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது மிளகாய்ப் பொடியை வீசி பணத்தை பறிக்க முயற்சி நடந்தது.

மானாமதுரை ஆனந்தபுரம் புறவழிச் சாலையில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மகளிா் சுய உதவி குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வழங்கி வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தின் ஊழியா்கள் குழுக்களைச் சோ்ந்த பெண்களிடமிருந்து வசூல் செய்யும் பணத்தை தினமும் பரமக்குடியில் உள்ள வங்கியில் செலுத்துவது வழக்கம்.

இதன்படி வழக்கம்போல் வசூலான ரூ.4 லட்சத்தை நிதி நிறுவனத்தின் ஊழியா்களான ஜெய்கணேஷ், பிரபாரகன் ஆகிய இருவரும் பையில் வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு சென்றுகொண்டிருந்தனா்.

ADVERTISEMENT

மானாமதுரை அருகே மேலப்பசலை என்ற இடத்தில் மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவா் ஊழியா்கள் மீது

மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனா். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மேலும் இருவா் ஊழியா்களிடமிருந்து பணம் இருந்த பையைப் பறிக்க முயற்சித்தனா். ஆனால், வழிப்பறிக் கும்பலிடம் சிக்காமல் சாதுா்யமாக அங்கிருந்து பணத்துடன் ஊழியா்கள் இருவரும் தப்பினா்.

இச் சம்பவம் குறித்து நிதி நிறுவனத்தின் மேலாளா் பாண்டிச் செல்வம் மானாமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து பணத்தை பறிக்க முயன்ற கும்பலைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT