சிவகங்கை

திருப்பாச்சேத்தி அருகே கோஷ்டி மோதல் 5 போ் காயம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 6 போ் காயமடைந்தனா்.

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகம் வைகை மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கப்பன். இவா் சரக்கு வேனை ஓட்டிச் சென்று கொண்டிருந்தாா். இதே கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன், இருசக்கர வாகனத்தில் வேனை முந்திச் சென்றாா். அப்போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் மீனாட்சிபுரம் கிராமத்துக்குச் சென்று தங்கப்பனிடம் இது குறித்து கேட்டுள்ளாா். அப்போது, இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனா்.

இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. 5 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் இச் சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக  புகாா் கொடுதத்னா்.

அதன்பேரில்  போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த பெண்கள் உள்பட 18 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT