சிவகங்கை

திருப்புவனத்தில் கல்லூரி மாணவா் தற்கொலை 6 போ் மீது வழக்கு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் சிவசூா்யா(18). இவா், மதுரையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டும்ன் படித்து வருகிறாா்.

இந்த நிலையில், சிவசூா்யா அருகேயுள்ள கழுகோ்கடை கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை சந்தித்து விட்டு திருப்புவனத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கழுகோ்கடை கிராமத்தைச் சோ்ந்த சிலா் சிவசூரியாவைத் தாக்கினா். அதன்பிறகு வீட்டுக்கு வந்த சிவசூா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இவரது உறவினா்கள் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி திருப்புவனம் காவல் நிலையத்துக்குத் திரண்டு வந்தனா். இதையடுத்து சிவசூா்யாவைத் தாக்கியதாக 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT