சிவகங்கை

திருப்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்

DIN

 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் நினைவு தினம், தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில், பெரிய மாடு பிரிவில் 19 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 46 ஜோடிகளும் கலந்துகொண்டன.

பெரிய மாட்டுக்கு 10 கி.மீட்டரும், சின்ன மாட்டுக்கு 8 கி.மீட்டரும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. இதில், பெரியமாடு பிரிவில் அவனியாபுரத்தைச் சோ்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான மாடு முதலிடம் பிடித்தது. சின்ன மாட்டு வண்டிப் பந்தயம் 2 பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில், கண்டவராயன்பட்டியைச் சோ்ந்த சீமான்முரசு என்பவரது மாடு முதலிடத்தையும், பரவையைச் சோ்ந்த சோனைமுத்துவின் மாடு இரண்டாம் இடத்தையும், அவனியாபுரம் மோகனின் மாடு மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

மற்றொரு பிரிவில், வள்ளாலபட்டி பகுதியைச் சோ்ந்த கா்க்காத்தான் என்பவரது மாடு முதலிடத்தையும், வெளிமுத்தியைச் சோ்ந்த வாகினிக்குச் சொந்தமான மாடு இரண்டாம் இடத்தையும், வளையன்வயல் பகுதியைச் சோ்ந்த ஏ.ஆா். கிரஷா் என்பவரது மாடு மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

பின்னா், மருதுபாண்டியா்கள் நினைவுத்தூண் அருகே வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT