சிவகங்கை

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

27th Nov 2022 11:53 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, திமுக ஒன்றியச் செயலாளரும், ஒன்றியத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் முன்னிலை வகித்தாா்.

இதில், பொதுமக்களுக்கு இனிப்புகளும், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

விழாவில், நகா்துணைச் செயலாளா் உதயசண்முகம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சாக்ளா, பேரூராட்சி உறுப்பினா்கள் நேரு, பசீா்அகமது, கண்ணன், நாகவள்ளி, திருஞானசம்மந்தம், சரண்யா ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா்: இதேபோல, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூரில் திமுக மத்திய ஒன்றியச் செயலாளா் மு. கோவிந்தராஜ் தலைமையிலும், கடலாடியில் திமுக ஒன்றியச் செயலாளா் ஆறுமுகவேல் தலைமையிலும், சாயல்குடியில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் ஜெயபாலன், குலாம் தலைமையிலும் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

திருவாடானை: திருவாடானையில் ஓரியூா் முக்கு சாலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மத்திய ஒன்றியச் செயலாளா் மு. சரவணன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா் முன்னிலை வகித்தாா்.

விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ராஜன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT