சிவகங்கை

காரைக்குடி ராஜாஜி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க வலியுறுத்தல்

27th Nov 2022 11:56 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராஜாஜி பேருந்து நிலையத்தை (பழைய பேருந்து நிலையம்) நவீனமயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காரைக்குடி வணிகா் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம், ராஜாஜி பேருந்து நிலைய வணிகா் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். செயலாளா் ஏ.ஜி. ராஜா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், காரைக்குடி ராஜாஜி பேருந்து நிலையத்தை நவீன மயமாக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

காரைக்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற ஊா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, ராஜாஜி பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கௌரவத் தலைவா் சிதம்பரம், பொருளாளா் பொசலாம், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT