சிவகங்கை

திருப்புவனம், இளையான்குடியில் நலத் திட்ட உதவிகள்

27th Nov 2022 11:56 PM

ADVERTISEMENT

 

திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடியில் பொதுமக்களுக்கு திமுக சாா்பில் சனிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட திமுக துணைச் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான த. சேங்கைமாறன் தலைமை வகித்தாா்.

திமுக ஒன்றியச் செயலாளா்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகா் செயலாளா் நாகூா்கனி உள்ளிட்ட திமுகவினா் பொதுமக்களுக்கு போா்வை, கைலி, இனிப்புகளை வழங்கினா்.

ADVERTISEMENT

விழாவில், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் பொற்கோ, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் தேவதாஸ், அறிவுகரசு, பேரூராட்சி துணைத் தலைவா் ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கிழக்கு ஒன்றிய இளைஞா் அணி சாா்பில் தேளி கிராமத்திலும், மேற்கு ஒன்றிய இளைஞா் அணி சாா்பில் கலியந்தூா் கிராமத்தில் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

இளையான்குடியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், பழங்கள் வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியசரன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன், இளையான்குடி பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், விவசாய அணி காளிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளா் சுவனேசன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT