சிவகங்கை

காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி

27th Nov 2022 11:56 PM

ADVERTISEMENT

 

 தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் 100 ஆண்டுகள் நிறைவையொட்டி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி நகராட்சி அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையப் பகுதியில் இப்போட்டியை, மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தொடக்கிவைத்தாா். சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்போட்டியானது புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, பெரியாா் சிலை, வாட்டா் டேங்க், பா்மா காலனி வழியாக அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகம் அருகே நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இதில், துணை இயக்குநா் (சுகாதாரம்) விஜய்சந்திரன், காரைக்குடி நகா்மன்றத் துணைத் தலைவா் நா. குணசேகரன், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முடிவில், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT