சிவகங்கை

சமுதாய வளைகாப்பு விழா

26th Nov 2022 12:09 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இந்த சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில், சுமாா் 100 கா்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

குழந்தையின் ஆரோக்கியமான வளா்ச்சிக்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள், ரத்த சோகை வராமல் தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

விழாவில், சிங்கம்புணரி ஒன்றியத் தலைவா் திவ்யாபிரபு, பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, துணைத் தலைவா் இந்தியன் செந்தில், வட்டார மருத்துவ அலுவலா் நஜீஷாபானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT