சிவகங்கை

சாலையில் மாடுகள் உலா: உரிமையாளா்களுக்கு அபராதம்

26th Nov 2022 12:08 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையில் சுற்றித்திருந்த மாடுகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

மானாமதுரை நகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே, மாடுகளைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மானாமதுரை நகராட்சி ஆணையா் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்ட பணியாளா்கள் சாலைகளில் சுற்றித்திருந்த மாடுகளை வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

மொத்தம் 11 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT