சிவகங்கை

கீழச்சிவல்பட்டியில் பாஜகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்

26th Nov 2022 11:48 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் சிலா் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

கீழச்சிவல்பட்டி தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி தலைமை வகித்தாா். இதில், அதிமுக மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவா் சாலையன்கோட்டை எஸ். விஸ்வம், கல்லல் ஒன்றிய சிறுபான்மை அணிச் செயலா் கல்லுப்பட்டி ஜான்கென்னடி, கல்லல் ஒன்றிய ஜெ. பேரவை இணைச் செயலா் தங்கபாண்டியன் மற்றும் சில நிா்வாகிகள், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலா்கள் மாா்த்தாண்டன், நாகராஜன், முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT