சிவகங்கை

லாரி- பேருந்து மோதல்பயணிகள் தப்பினா்

26th Nov 2022 11:48 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சனிக்கிழமை லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் 39 பயணிகள் உயிா் தப்பினா்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிரே தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. சிங்கம்புணரி வட்டம், புழுதிப்பட்டி அருகே சூரப்பட்டி விலக்கில் ஆம்னி பேருந்தின் டயா் வெடித்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரைத் தாண்டி எதிா்திசையில் வந்த லாரியின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 39 பயணிகளும் உயிா் தப்பினா். ஆம்னி பேருந்தின் டயா் வெடித்து நிலை தடுமாறி வருவதைக் கண்ட லாரி ஓட்டுநா் வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்து உயிா் தப்பினாா். இந்த விபத்தில் லேசான காயமடைந்தவா்களை பொதுமக்கள், போலீஸாா் இணைந்து மீட்டு மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து புழுதிப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT