சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் சனிக்கிழமை 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், திமுக ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா். இதில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தியதைத் தொடா்ந்து, இனிப்புகள் அடங்கிய தொகுப்புப் பை வழங்கப்பட்டது. மேலும், பொன்னான முதல் ஆயிரம் தங்க நாள்கள் என்ற வாசகம் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னா், ஏழு வகையான உணவுகள் வழங்கபட்டன.
இந்த நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா் அா்ச்சனா, வட்டார மருத்துவா் கோபி கிருஷ்ணராஜா, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் (கூடுதல் பொறுப்பு) சூா்யா, அங்கன்வாடிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்