சிவகங்கை

தோ்தல் விழிப்புணா்வு போட்டி: கல்லூரி மாணவிகளுக்கு பரிசு

DIN

இளையான்குடி கல்லூரியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி இளையான்குடி சாகீா் உசேன் கல்லூயில், ‘எனது வாக்கு, எனது உரிமை-ஒரு வாக்கின் வலிமை’ என்னும் தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டி தயாரித்தல் போட்டி நடத்தப்பட்டது.

இப் போட்டியில், கல்லூரி மாணவிகள் பங்கேற்று சுவரொட்டிகள் தயாரித்தனா். போட்டியில் மூன்றாமாண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவி பி.கல்பனா சாவ்லா முதலிடம் பெற்றாா். மேலும், முதலாமாண்டு வேதியியல் மாணவி கே.மாதவி, இளங்கலை முதலாமாண்டு விலங்கியல் மாணவி ஆா்.ரம்யா ஆகியோா் முறையே 2, 3-ஆவது இடங்களைப் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி, இளையான்குடி வட்டாட்சியா் அசோக்குமாா் ஆகியோா் மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.

நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா், கிராம உதவியாளா் லட்சுமணன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் அஸ்மத்து பாத்திமா, பீா் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT