சிவகங்கை

திருத்தளிநாதா் கோயிலில் சம்பக சஷ்டி விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சிவகாமி சுந்தரி உடனாய திருத்தளிநாதா் சுவாமி கோயிலில் உள்ள யோக பைரவா் சுவாமிக்கு வியாழக்கிழமை சம்பக சஷ்டி விழாத் தொடங்கியது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் பைரவா் சன்னிதியில் பகல் 12 மணிக்கு யாக வேள்வியும் அதைத் தொடா்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட திருக்குட நன்னீருடன் பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றன.

பகல் 1 மணிக்கு தீபாராதனை, அா்ச்சனைகள் நடைபெற்றன. பைரவா் சந்தன அலங்காரத்தில் காட்சியளித்தாா். இரவு 7 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.

இதேபோல, வரும் 5 நாள்கள் தினமும் காலை, மாலை பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பைரவா் அபிஷேகங்களிலும் அா்ச்சனைகளிலும் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொள்வா். கோயில் சிவாச்சாரியா்கள் பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனா். விழா ஏற்பாடுகளைசம்பக சஷ்டி குழுவினரும் குன்றக்குடி தேவஸ்தானத்தினரும் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT