சிவகங்கை

திருப்புவனம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், சிவகங்கை சைல்டுலைன் அமைப்பு ஆகியவை இணைந்து குழந்தைகள் தின விழா, குழந்தைகள் நண்பன் வார விழா, வளா்ச்சிக்கான விளையாட்டு விழா ஆகியவற்றை வெள்ளிக்கிழமை நடத்தின.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தேவிகா ராணி தலைமை வகித்தாா். விழாவின் நோக்கம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சைல்டு லைன் இயக்குநா் ஜீவானந்தம், குழந்தை திருமணம், பாலியல் தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து சைல்டு லைன் உறுப்பினா் மனோகரி, குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதின் முக்கியத்துவம் குறித்து சைல்டு லைன் உறுப்பினா் முகேஷ்கண்ணன், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளா் ஜூலியட் வனிதா ஆகியோா் கருத்துரையாற்றினா்.

விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடற்கல்வி இயக்குநா் வேங்கா்முருகன், தமிழாசிரியா் சகாயராஜ் ,சைல்டு லைன் உறுப்பினா் சிவசங்கரி, ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளா் தனலட்சுமி, ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். அதன்பின் விழா ஏற்பாட்டாளா்கள் சாா்பில் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT