சிவகங்கை

குரூப் 1 தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 2,562 போ் எழுதினா்

19th Nov 2022 11:25 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 2,562 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 தோ்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முதல் நிலைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக சிவகங்கை மாவட்டத்தில் கோவிலூா் நாச்சியப்பா சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி, அமராவதிபுதூா் சாரதா நிகேதன் மகளிா் கல்லூரி, ராஜராஜன் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி என 14 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தோ்வெழுத மாவட்டத்தில் 4,317 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,562 போ் தோ்வு எழுதினா். 1,755 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT