காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறையில் சிலப்பதிகாரம் குறித்த சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
பேராசிரியா் ராம. ராமநாதன் - ருக்மணி ராமநாதன் மணி விழா அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியாக நடை பெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா்.
‘மாதவி மடந்தை கானற்பாணி’ என்ற தலைப்பில் திருவையாறு அரசா் கல்லூரி முன்னாள் முதல்வா் சண்முக. செல்வகணபதி சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனரின் குடும்பத்தினா், புலவா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவா் சு. ராசாராம் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் மு. நடேசன் நன்றி கூறினாா்.